2021 ஆம் ஆண்டு முதல் 2024 வரை தமிழகத்தில் எத்தனை குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன மற்றும் 18 வயதுக்கு கீழ் கர்ப்பம் அடைந்தவர்கள் குறித்த தரவுகள் தகவல் அரியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
குழந்தை திருமணம் செய்யப்படுவதால், சம்பந்தப்பட்ட குழந்தைகளின் எதிர்காலமும், நல்வாழ்வும் பாதிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு வயதிற்குகேற்ற உடல் நலம், கல்வி ஆகியவை கிடைக்காமல் குழந்தைகளின் முன்னேற்றம் தடைபடுவதற்கான வாய்ப்பாக அமைகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தவும், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அவர்களின் பாதுகாப்பான சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையிலும், தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, மாவட்ட அளவில் குழந்தை திருமண தடுப்பு அலுவலர்களாக மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், காவல் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர்கள், விரிவாக்க மற்றும் ஊர் நல அலுவலர்கள் ஆகியோரைக் கொண்ட குழு செயல்பட்டு வருகிறது.
மேலும், தற்பொழுது ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிபுரியும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தங்கள் பகுதிகளில் குழந்தை திருமணம் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005ன் கீழி சென்னையை சேர்ந்த சி.பிரபாகர் என்பவர் 2021 ஜனவரி முதல் பிப்ரவரி 2024 வரை தமிழ்நாடு முழுவது நடந்த குழந்தை திருமணங்கள் குறித்த விவரங்களை கேட்டிருந்தார். அதன்படி, சி.பிரபாகர் கோரிய தகவல்களை பொது தகவல் அலுவலர் வெளியிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு முதல் 2024 வரை தமிழ்நாட்டில் எத்தனை குழந்தை திருமணங்கள் மாவட்ட சமூக நல அலுவலர்களால் நிறுத்தப்பட்டுள்ளன என்ற
தரவு கீழ்காணுமாறு:
- மாவட்ட சமூக நல அலுவலர்களால் நிறுத்தப்பட்ட குழந்தை திருமணங்கள் : 2638
- குழந்தை திருமண தடைச் சட்டம் – 2006 இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட குழந்தை திருமணங்கள் : 707
2021 முதல் 2024 வரை 18 வயதுக்கு கீழ் கர்ப்பம் அடைந்தவர்கள் குறித்த விவரம் கீழ்காணுமாறு:
2021 ஆம் ஆண்டு:14,331
2022 ஆம் ஆண்டு: 10,901
2023 ஆம் ஆண்டு: 9,565
2023 ஆம் ஆண்டு (ஜனவரி முதல் பிப்ரவரி) : 1,637