For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேட்மிண்டன் ஆடிக்கொண்டிருந்தபோது.. சுருண்டு விழுந்து.. ஷாக்.. ஓமனில் இந்தியருக்கு நேர்ந்த சோகம்

Google Oneindia Tamil News

மஸ்கட்: ஓமன் நாட்டில் பேட்மிண்டன்விளையாடிக்கொண்டிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உலகம் முழுவதும் இதுபோன்று மாரடைப்பு பிரச்னைகள் இருந்தாலும், இந்தியர்கள்தான் இதனால் அதிகமான அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அழுத்தமான வேலை சூழல், உணவு முறை, உடற்பயிற்சி இன்மை, குறுகிய காலத்தில் அதீத உடற்பயிற்சி, உறக்கமின்மை, காற்று மாசு என இந்த மாரடைப்புக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மற்ற நாடுகளில் குறிப்பிட்ட காலத்திற்கு மாரடைப்பு ஏற்படுகிறது எனில் இந்தியாவில் அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னரே மாரடைப்பு ஏற்பட்டு விடுகிறது.

இவ்வாறான சூழலில் ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட் பகுதியில் ஒரு உள் விளையாட்டு அரங்கத்தில் பாட்மின்டன் விளையாடிக்கொண்டிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று காலை நடைபெற்றிருக்கிறது. காலை வழக்கம்போல் இவர் தனது நண்பர்களுடன் பாட்மின்டன் விளையாட தொடங்கியுள்ளார். தினமும் இவ்வாறு விளையாடுவது இவர்களின் வழக்கம்.

12 வயசு சிறுவன் மாரடைப்பால் பலி! குழந்தைகளுக்கு மாரடைப்பு அபாயம்! 12 வயசு சிறுவன் மாரடைப்பால் பலி! குழந்தைகளுக்கு மாரடைப்பு அபாயம்!

மயக்கம்

மயக்கம்

அதேபோல நேற்று காலையிலும் உற்சாகமாக விளையாட்டு தொடங்கி இருக்கிறது. விளையாட்டு ஒரு கட்டத்தில் விருவிருப்படையவே, இவரும் தீவிரமாக விளையாடியிருக்கிறார். கடைசியாக வந்த பந்து மிகவும் தாழ்வாக வந்திருக்கிறது. இவர் கீழே அமர்ந்து அந்த பந்தை அடிக்க முயன்றிருக்கிறார். ஆனால், அவரால் பந்தை அடிக்க முடியவில்லை. மாறாக மயக்கமடைந்து கீழே விழுந்திருக்கிறார். விழுந்தவர் எந்திரிக்கவே இல்லை. பின்னர் அவருடைய நண்பர்கள் இவரை சுற்றி நின்று எழுப்ப முயன்றுள்ளனர். அப்போது எழவில்லை. இதனையடுத்து அவரை மீட்டு உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உயிரிழப்பு

உயிரிழப்பு


அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை விசாரணையை தொடங்கியது. விசாரணையில்தான் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. பொதுவாக 30-69 வயதுக்குட்பட்டவர்களுக்குதான் மாரடைப்பு வருவதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இது இளம் வயதினரை கூட அதிக அளவில் பாதிக்கிறது. மர்பின் இடது பக்கத்தில் ஏற்படும் வலியை வாயு பிரச்னை என்றும், அசிடிட்டி என்றும் சிலர் தவறாக புரிந்துக்கொண்டுள்ளனர். இது மாரடைப்பு குறித்த அறிகுறி என்று அவர்களுக்கு தெரிவதில்லை.

வலி

வலி

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "மார்பில் வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும். சிலர் வலி தீவிரமடைந்த பின்னர் மருத்துவர்களை அணுகுகின்றனர். இதால் எங்களுக்கு சிகிச்சையளிக்கவும் போதிய நேரம் கிடைப்பதில்லை. எனவே வலியை உணர தொடங்கியவுடன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். மட்டுமல்லாது குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையேனும் ஈசிஜி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், அப்போதுதான் இதயத்தின் செயல்பாடுகள் சீராக இருக்கின்றனவா என்பதை கண்டறிய முடியும்" என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

காற்று மாசு

காற்று மாசு

மேற்குறிப்பிட்ட காரணங்கள் அனைத்திலும் காற்று மாசுபாடு மாரடைப்பு ஏற்பட பிரதான காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். காற்று மாசானது 450க்கும் அதிகமாக இருக்கும் இடங்களில் வசிப்பவர்கள் அதிக அளவு மாரடைப்பு ஏற்படுவதற்கான சூழலில் இருப்பவர்கள் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். இவ்வாறான காற்றை நாம் சுவாசிக்கும்போது நமது உடலில் உள்ள ரத்தத்தில் காற்றின் துகள்கள் கலந்து ரத்தம் உறைதலை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. அதே போல அதிக குளிரில் வசிக்கும்போதும் கூட நமக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

English summary
An Indian-origin man died of a sudden heart attack while playing badminton in Oman. The video of the incident is going viral on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X