நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார்!

பிரபல நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 66.

Written by - Sudharsan G | Last Updated : Dec 7, 2022, 11:59 PM IST
நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார்! title=

திரைப்பட நடிகர் பட்டுக்கோட்டை T. சிவ நாராயணமுர்த்தி (66) இன்று (டிச. 7) இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் சுமார் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இவருக்கும் அவரது மனைவி புஷ்பவல்லிக்கும் லோகேஷ், ராம்குமார், ஸ்ரீதேவி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவரின் இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் நாளை மதியம் 2.00 மணிக்கு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | பேரதிர்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன்! விடுதலை படப்பிடிப்பு நிறுத்தம்

Tamil

 

மறைந்த சிவ நாரயணமூர்த்தி வடிவேலு, விவேக் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களுடன் பல்வேறு காட்சிகளில் நடித்துள்ளார். மேலும், ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களிந் படத்திலும் நடித்துள்ளார். இவரை இயக்குநர் விசு அறிமுகப்படுத்தியதாக கூறப்படும் நிலையில், அவரது முதல்படமாக பூந்தோட்டம் திரைப்படம் அமைந்துள்ளது.

Tamil

இவரின் மறைவு செய்தி திரைத்துறையினர், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க | நிர்கதியாய் நிற்கிறேன்! நடிகர் சங்கம் உதவுமா? வெண்ணிலா கபடிகுழு நடிகரின் மனைவி வேண்டுகோள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News