31.9 C
Chennai
June 7, 2024
முக்கியச் செய்திகள் உலகம்

இன்னும் 2 நாட்கள் தான்… BTS ரசிகர்களுக்கு விருந்து வைக்க வருகிறது ‘Hope on the Street’

BTS உறுப்பினர் ஜே-ஹோப்பின் வாழ்க்கைப் பயணம் குறித்து பேசும் ஆவணத் தொடரான,  ‘Hope on the Street’ நாளை மறுநாள் வெளியாக உள்ளதால்,  ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

தென்கொரியாவைச் சேர்ந்த பிரபல இசைக்குழு BTS. ஜின், சுகா, ஜே-ஹோப், RM, ஜிமின், V, ஜங்கூக் ஆகிய 7 பேர் அடங்கிய இந்த குழுவுக்கு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர்களது பாடல்கள் தங்களுக்கு உத்வேகம் அளிப்பதாக பல இளைஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தென்கொரிய அரசு விதிப்படி அந்நாட்டு இளைஞர்கள் கட்டாயமாக 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி பெற வேண்டும். அந்த வகையில் BTS உறுப்பினர்கள் அனைவரும் ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் குழுவின் மூத்த உறுப்பினரான ஜின் ராணுவ பயிற்சி பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

HOPE ON THE STREET - Official Trailer | Prime Video

ராணுவ பயிற்சியை முன்னிட்டு BTS உறுப்பினர்கள் முன்னதாகவே தங்களது சோலோ பாடல்கள்,  ஆல்பத்திற்கான பணிகளை முடித்துவிட்டுச் சென்றுள்ளனர்.  ஜங்கூக்கின் ‘கோல்டன்’ ஆல்பம், V-ன் டிஜிட்டல் சிங்கிள் ‘FRI(END)S’ உள்ளிட்டவை முன்னதாகவே தயார் செய்யப்பட்டு,  அவர்கள் ராணுவ பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வெளியானது. ரசிகர்களும் அதனை கொண்டாடி தீர்த்தனர்.

இதையும் படியுங்கள் : வெற்றிக் கணக்கை தொடங்கியது ஆர்சிபி – பஞ்சாபை வீழ்த்தி த்ரில் வெற்றி

இந்நிலையில் நாளை மறுநாள் (மார்ச் 28)  BTS உறுப்பினர் ஜே-ஹோப்பின் ஆவணத் தொடரான ‘Hope on the Street’ வெளியாக உள்ளது.  6 எபிசோட்டுகள் இந்த ஆவணத் தொடரில் இடம்பெற்றுள்ளது.  ‘பிரைம் வீடியோ’ ஓடிடி தளத்தில் இந்த தொடர் வெளியாக உள்ளது. இந்த ஆவணத் தொடரில் ஜே-ஹோப், BTS-ல் சேர்வதற்கு முன்னர் தெருக்களில் நடனமாடும் ‘ஸ்ட்ரீட் டேன்சர்’ ஆக இருந்தது குறித்த பகுதிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. 6 பாடல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading