30.6 C
Chennai
June 3, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

பிறந்தநாள் கொண்டாடும் ’இசைஞானி’ இளையராஜாவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எவர்கிரீன் பாடல்கள் என்றால் அது இளையராஜா பாடல்கள் தான் என்று இன்றளவும் பெரும்பான்மையான மக்கள் சொல்வதை கேட்க முடியும். அப்படி இசை உலகில் தனக்கென தனி முத்திரையை ஆழமாகப் பதித்தவர் இளையராஜா. ’இசைஞானி’ என்று போற்றப்படும் இவர் 1976 ஆம் ஆண்டு வெளியான ’அன்னக்கிளி’ படத்தில் இசையமைத்ததன்மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்திய சினிமாவிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இளையராஜா, இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழி ரசிகர்களையும் தன்வசப்படுத்தினார். தலைமுறைகளைக் கடந்த இசையமைப்பாளர் இளையராஜா என்றால் அது மிகையல்ல. மக்கள் விரும்பும் இசையை வாரி வழங்கிய இளையராஜா, அண்மையில் வெற்றிமாறனின் ’விடுதலை’ படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இசை உலகின் அரசனாக வலம் வரும் இளையராஜா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு திரைத்துறையினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக நடிகர் கலம்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள் : பிறந்தநாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதி இளையராஜாவை வாழ்த்துகிறேன்!! – நடிகர் கமல்ஹாசன் ட்வீட்

இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள இளையராஜாவின் அலுவலகத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு அவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அப்போது அவர், அறிஞர் அண்ணாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய சொற்பொழிவுகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உரைகள், கடிதங்கள், அரிய பேட்டிகளை கொண்ட, “மாபெரும் தமிழ் கனவு” என்ற நூலை வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading