Posted by: மீராபாரதி | October 1, 2021

பழங்குடி மக்கள்: வணிகமும் காலனித்துவமும் – பகுதி 2

பழங்குடி மக்கள்: வணிகமும் காலனித்துவமும்

முன்னோக்கிப் பார்க்க பின் நோக்கிப் பார்த்தல்!
இன்று கனடா என அழைக்கப்படுகின்ற நாட்டில் முதன் முதலாக  ஐரோப்பியர்களுக்கும் பழங்குடிகளுக்கும் ஏற்பட்ட தொடர்பைப் பற்றி கதைக்க வேண்டும். கனடா ஒரு தேசமாக அதன் வரலாற்றைப் பற்றி  கதைப்பதற்கு காலனித்துவத்தைப் பற்றி கதைக்காமல் நாம் கடந்து செல்ல முடியாது. 

Arikara | History, Culture, & Beliefs | Britannica

காலனித்துவம் என்பது குறிப்பிட்ட மக்கள் கூட்டம் (colonizers) ஒன்று இன்னுமொரு மக்களை  கூட்டத்தைக் (colonized)கட்டுப்படுத்தி அதிகாரம் செய்வது என சொல்லலாம். அதாவது இன்னுமொரு மக்கள் கூட்டத்தின் நிலத்தையும் அதன் வளங்களையும்  ஆக்கிரமிப்பதும் சுரண்டுவதுமாகும். மேலும் அந்த மக்கள் கூட்டத்தின் வாழ்வுமுறையை சிதைப்பது மட்டுமல்ல அழிப்பதுமாகும்.  இதன் நீட்சியாக இந்த நிலங்களில் தாம் குடியேறுவதற்கு ஏற்றவகையில் மாற்றுவதாகும். ஜரோப்பாவில் பல்வேறு காலனித்துவ ஆக்கிரமிப்பாளர் குழுக்கள் இருந்தன. இருக்கின்றன. இவர்கள் உலகத்திலுள்ள ஆபிரிக்கா, ஆசியா, அவுஸ்ரேலியா, மட்டுமல்ல அமெரிக்க கண்டங்களையும் ஆக்கிரமித்து தமது காலனித்துவ நாடுகளாக்கினர். இவ்வாறான செயற்பாடுகள் இன்றும் தொடர்கின்றன. காலனித்துவம் என்பது ஒரு தொடர் செயற்பாடு.

Nakoda: The Assiniboine People - The Stone Sioux - History & Culture -  YouTube

காலனித்துவம் தொடர்பான பல பார்வைகள் உள்ளன. எல்லாவிதமான காலனித்துவ செயற்பாடுகளும் ஒரே நேரத்திலோ அல்லது படிமுறை வளர்ச்சியிலோ நடந்தவையல்ல. காலனித்துவம் என்பது பின்வருவனவற்றை உள்ளடக்கி இருக்கும். முதலாவது பழங்குடி மக்களின் அரசியல், பொருளாதாரம், சமூகம், ஆன்மீகம் போன்ற சகல வற்றையும் உள்ளடக்கிய வாழ்வு முறைகளை மாற்றுவது. இரண்டாவதாக வெளியிலிருந்து அரசியல் அடிப்படையில் கட்டுப்படுத்தும் முறைமையை உருவாக்குவது. மூன்றாவதாக பழங்குடி மக்களை பொருளாதார ரீதியாக காலனித்துவத்திடம் தங்கியிருப்பதற்கு நிர்ப்பந்திப்பது. நான்காவது மிகவும் மோசமான கல்வி, சுகாதாரம் போன்ற சமூக சேவைகளை பழங்குடி மக்களுக்கு வழங்குவது.  இச் செயற்பாடுகளின் விளைவுகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் (காலனித்துவத்திற்கும்) காலனித்துவத்திற்கு உட்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட மக்களுக்கும் இடையில் பாரிய சமூக இடைவெளிகளை உருவாக்கின்றன. இவை இனத்துவ அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதால் நிறுவனமயப்பட்ட இனவாதத்தையும் ஊக்குவிக்கின்றது. இச் செயற்பாடுகள் கனடாவில் பல நூற்றாண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்றன. இதுவே இன்று நாம் பார்க்கும் கனடா நாடு. இவ்வாறான ஐரோப்பிய காலனித்துவ செயற்பாடுக்கள் நடைபெற்றிருக்காவிட்டால் இன்று நாம் பார்க்கும் கனடா மிகவும் வேறுபட்ட ஒன்றாக இருந்திருக்கும்.

Innu History

ஐரோப்பியர்கள் அத்திலாண்டிக் சமுத்திரத்தைக் கடப்பதற்கு பல காலத்திற்கு முன்பே வட அமெரிக்க பழங்குடி மக்களின் வரலாறு ஆரம்பித்துவிட்டது. இது மட்டுமல்ல அவர்களுக்கு சொந்தக் கதைகளும் சிறப்பான துடிப்பான சிக்கலான தொடர்பாடல் முறைகளும் போக்குவரத்துப் பாதைகளும் இருந்தன. மேலும் பன்முகத்தன்மை வாய்ந்த வாழ்வு முறைகளும் அறிவைத் தேடும் வழிகளும் காணப்பட்டன. இரத்த உறவுகளாலும் வியாபார வலைப்பின்னல்களாலும் இவர்களுக்கிடையில் உறவுகள்  இருந்தன. அடிப்படைத் தேவைகளுக்கான வியாபாரங்களை விட ஆடம்பர பொருட்களுக்கான வியாபாரங்களும் நடைபெற்றன. செம்பு, முத்துகள் செய்வதற்கான கடற்சிற்பிகள், உபகரணங்கள் செய்வதற்கான  எரிமலைக் கற்கள், flints எனப்படும் சுண்ணாம்புக் கற்கள், மற்றும் ஒருவகை மீனிலிருந்து செய்யப்படும் எண்ணைகள் என்பன முக்கியமான விற்பனைப் பொருட்களாகும்.  கரையோர பழங்குடி மக்களால் பல்லாயிரக்கணக்கான  ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த மீன் எண்ணை வியாபாரத்தால் இப் பாதைகள் கிரீஸ் பாதைள் (grease trails) எனவும் அழைக்கப்பட்டன. Mandan and the Arikara போன்ற பழங்குடிகள் தம்மிடமிருந்த அதிகப்படியான சோளத்தை மிருக தோல் மயிருக்காகவும்  இறைச்சிக்காகவும் Assiniboine பழங்குடிகளுடன் பண்டமாற்று செய்தார்கள். இவர்களின் வியாபார நிகழ்வுகளில் ஒரு கூரு நேர்மறையான உறவுகளையும் கூட்டுறவையும் வளர்ப்பதாக இருந்தன. இதன்போது பரிசுகளும் பரிமாறப்படுவது முக்கியமான நிகழ்வுகள். இவர்களுக்கு விலை உயர்ந்த மதிப்புக்கூடிய பொருட்கள் என ஒன்றுமில்லை. அனைத்தும் தமது மற்றவர்களின் தேவைகளுக்கானவையே இருந்தன.  பொருட்கள் மீது சொந்தம் கொண்டாடுவதுமில்லை. இதற்கு இவர்கள் கால நிலைகளுக்கு ஏற்ப இடம் மாறுவதும் காரணமாக இருந்தது. அதேநேரம் ஒருவர் வீடில்லாமல் பசியில் இருக்கும் போது மற்றவர்களிடம் அதிகமான சொத்துகள் இருப்பது இவர்களைப் பொறுத்தவரை அர்த்தமற்றது. ஏனெனில் இவர்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு மனிதரும் பெறுமதியானவர்கள்.

wendat by corsogill on emaze

காலனித்துவத்தின் சிக்கல்

ஐரோப்பியர்களின்  குறிப்பாக ஆங்கிலேய, பிரஞ்சு ஆக்கிரமிப்பாளர்களின் வருகையுடனையே கனடாவை “கண்டுபிடித்ததாக” கூறுவார்கள். ஆனால் நிச்சயமாக பழங்குடி மக்களைப் பொருத்தவரை இது கண்டுபிடிப்பேயல்ல. ஏனெனில் ஐரோப்பியர்கள் “கண்டுபிடித்த” வட அமெரிக்க நிலத்தில் பழங்குடி மக்கள் நாற்பதாயிரம் ஆண்டுகளாக ஏற்கனவே வாழ்ந்து வருகின்றார்கள். மேலும் இவர்கள் வருவதற்கு முன்பே பழங்குடிகள் தாம் வாழ்கின்ற இந்த நிலத்தைப் பற்றி நன்றாக அறிந்தும் வைத்திருந்தனர். 

வட அமெரிக்காவில் ஆரம்ப குடியேற்றம் 1000 ஆண்டளவில் இன்றைய நியூபவுன்லான்ட் என்ற இடத்தில் சிறியளவில் நடைபெற்றதாக தொல்லியலாய்வுகளின் அடிப்படையில் அறியப்படுகின்றது. இக் குடியேற்றம் எவ்வளவு காலங்கள் இருந்தன என்பதை அறிய முடியவில்லை. சில வருடங்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. பழங்குடி மக்களை வன்முறையாளர்களாகவும் குடியேறியவர்களை விரட்டிவிட்டார்கள் எனவும் குடியேறியவர்களின் குறிப்புகள் கூறுகின்றன. இதன்பின்பு 1400வரை பழங்குடிகள் எந்தவிதமான குடியேற்றவாதிகளையும் ;காணவில்லை. பதினாறாம் நூற்றாண்டளவிலையே Basque whalers and French whalers  கிழக்குகரையோரம் வாழ்ந்த பழங்குடி மீன்பிடிப்பவர்களை சந்தித்து  அவர்களுடன் வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர். இக் காலங்களில் இந்த சந்திப்புகள் ;சாதாரணமானவையாக இருந்தன. ஐரோப்பிய தேசங்களைப் பொருத்தவரையும் மீன்பிடித் துறையில் இலாபம் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தனர். குடியேறுவதோ ஆதிக்கம் செய்வதோ இவர்களின் முதல் அக்கறையாக இருக்கவில்லை. ஆனால் இந்த சந்திப்புகள் மிருகத்தோல்மயிர் வியாபாரத்திற்கான அடித்தளத்தை இட்டது எனலாம். இந்த வியாபாரம் நடைபெறும் வரை மிருகத்தோல்மயிர் எந்தவிதமான பெறுமதியையும் பழங்குடி மக்களிடம் கொண்டிருக்கவில்லை. இதன்பின்புதான் பொருட்களுக்கு பெறுமதி உள்ளது என்பதை உணர்ந்தார்கள். தாமும் அதைச் சேகரிக்க ஆரம்பித்தார்கள். இதன் தொடர்ச்சியாக கரடி, மான், நரி, எருமை போன்ற பல மிருகங்களும் அதன் தோல்களும் முக்கியமான மூலப் பொருட்களாயின. இதன் விளைவாக Beaver போன்ற மிருகங்கள் குறைந்து இல்லாமல் போயின.

Samuel de Champlain | The Canadian Encyclopedia

மிருக தோல்மயிர் வியாபாரம் வடஅமெரிக்க பழங்குடி மக்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் 1400களில் ஆரம்பமாகி 250 வருடங்களாக நடைபெற்றன. இந்த வியாபாரம் வணிக முயற்சியாக காலனித்துவ இயக்கத்தை  செயற்படுத்தியது எனலாம். சிறியளவில் நடைபெற்ற இந்த வணிகம் சிக்கலான ஒன்றாக வளர்ச்சியடைந்தது. இவ்வாறான மூலப் பொருட்களைப் பெற்று பொருட்களை உற்பத்தி செய்து விற்றமையினால் ஐரோப்பிய பொருளாதாரம் நன்மையடைந்தது. இதனால் ஐரோப்பியர்களுக்கு குறைந்த விலையில் இவ்வாறான மூலப்பொருட்கள்  அதிகம் கிடைக்கக்கூடிய காலனித்துவ நாடுகள் தேவைப்பட்டன. அதேநேரம் இவ்வாறான பயனுள்ள மதிப்புள்ள மூலப்பொருட்களை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க பல்வேறு ஐரோப்பிய தேசங்களுக்கிடையில் போட்டிகளும் வன்முறைகளும் நடைபெற்றன. இவ்வாறான சிந்தனை முறையையே  வணிகம் என்கின்றனர். இப்படி எளிமையாக சிந்திப்பதையே வணிகவாத பொருளாதார சூத்திரம் என்கின்றனர்.  இது இலாபத்தைப் பெறுவதிலையே நம்பிக்கை உள்ளது. 1500 -1700 வரையான காலங்களில் இவ்வாறான ஐரோப்பிய சட்டங்களும் நடைமுறைகளுமே பின்பற்றப்பட்டன. இக்கால உலகமயமாக்களில் ஐரோப்பியர்கள் தூரத்திலிருக்கின்ற நாடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிகாரம் செய்வதற்கான திட்டங்களை மேற்கொண்டனர்.

Donnacona - Wikipedia

கனடாவின் வரலாற்றை எழுதும் போது  Giovanni Caboto (also known as John Cabot) in 1497, Jacques Cartier in 1534, and Martin Frobisher in 1576 போன்ற கண்டுபிடிப்பாளர்களின் வருகையுடனையே ஆரம்பிக்கின்றமை தூரதிர்ஸ்டமானது. பழங்குடிகள் தாம் முதன் முதலில் கண்ட ஐரோப்பியர்கள் தொடர்பாக பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.
“வித்தியாசனமான தோற்றமுடிடைய ஆண்கள் நீரைக் கடந்து வந்தார்கள். ….அவர்களது தோல்கள் பனியைப் போல வெள்ளையாக இருந்து…முகங்களில் நீளமான மயிர்கள் இருந்தன.. நீரைக் கடந்த வந்தவர்களின் படகுகள்  மிகப் பெரிதாக இருந்தது மட்டுமல்ல இராச்சத பறவைகளுக்கு இருப்பதைப் போல பெரிய வெள்ளைச் சிறகுகள் இருந்தன.”

“இந்த ஆண்களிடம் நீண்டதும் கூரானதுமான கத்திகள் காணப்பட்டன. இதைவிட நீளமான கறுப்புக் குழாய்களைக் கொண்டு பறவைகளையும் மிருகங்களையும் குறிபார்த்தனர். எங்களது புகைத்தல் குழாய்களிலிருந்து புகை வருவதைப் போல இந்தக் குழாய்களும் புகைகளை உருவாக்கி வானத்தில் பரவவிட்டன. மேலும் இவற்றிலிருந்து நெருப்பு வந்ததுடன் ஒருவிதமான பயங்கர சத்தத்தையும் உருவாக்கின.”

1497ம் ஆண்டு இங்கிலாந்தின் கொடியுடன் Giovanni Caboto தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்து அத்திலாந்திக் சமுத்திரத்தைக் கடந்து இன்றைய கனடாவின் நியூபவுன்லான்ட் அல்லது லாபோடோர் என்ற இடத்தில் இறங்கினார். உண்மையில் அவரது நோக்கம் ஆசியாவின் விலையுயர்ந்த சந்தைகளுக்கான பாதைகளைக் கண்டுபிடிப்பதேயாகும். அவரது முதல் பயணத்தில் பழங்குடிகளை சந்தித்ததற்கோ அல்லது அவர்களுடன் வியாபாரம் செய்ததற்கோ எந்த ஆதாரங்களும் இல்லை. இருப்பினும் கப்பலைவிட்டு இறங்காத அவர் இந்த நிலத்தை இங்கிலாந்தின் ஏழாவது அரசர் ஹென்றிக்கு உரித்துடையது என உரிமை கூறினார். இரண்டாம் முறையும் அரசரின் ஆதரவுடன் பயணம் செய்தார். இதன்பின் வந்த அடுத்த முப்பது வருடங்களில் (1500 -1528) போர்த்துகீசர், ஸ்கொட்டிஸ் உட்பட பல ஐரோப்பியர்கள் இந்த இடத்தில் வியாபாரம் செய்யவும் கொள்ளையடிக்கவும் வந்தனர்.

User:Donnacona - Simple English Wikipedia, the free encyclopedia

1534ம் ஆண்டு முதன் முதலாக பிரான்சிலிருந்து லோறன்ஸ் வாவிவரை வந்த Jacques Cartier பழங்குடிகள் பெரியளவில் இருந்த இடங்களில் தமது குடியேற்றங்களை அமைத்தார். மேலும் Mi’kmaq பழங்குடிகளுடன் வெற்றிகரமாக வியாபாரத்தில் ஈடுபட்டார். இதனால் இவர் மேலும் உள்நோக்கி கியூபெக் வரை சென்றார். இங்குதான் இவர்  பல முதல் தவறுகளைச் செய்தார். முதல் சிலுவையை நட்டு அதில் “பிரான்சின் அரசர்” என எழுதினார். பழங்குடிகளின் தலைவர் Chief Donnacona இந்த நிலம் தனது எனவும். இங்கு தனது அனுமதியில்லாமல் எதுவும் செய்யக்கூடாது எனக் கூறியதாக Cartier தனது குறிப்பில் குறிப்பிடுகின்றார். இதற்கு தனது கப்பலின் திசையை அறிவதற்காகவே இதனை நட்டேன் என தான் கூறியதாக குறிப்பிடுகின்றார். அதேநேரம் Chief Donnacona வின் மகன்கள் இருவரையும் கடத்தி தனது பயணத்திற்கும் தேடுதல்களுக்கும் வழிகாட்டிகளாகப் பயன்படுத்தினார். இரண்டாவது பயணத்தின்போது பழங்குடிகளின் தலைவரையே  Chief Donnacona கடத்திக் கொண்டு பிரான்சிக்குச் சென்றார். இவர்கள் அனைவரும் அங்கு இறந்தனர். மூன்றாவது பயணத்தின் போது 1541யில் குடியேற்றம் ஒன்றை அமைத்தபோதும் பழங்குடிகளின் அனுமதி பெறாமையினால் காலனித்துவத்தின் முதல் முயற்சி 1543யில் முடிவுற்றது. 1603யில் Samuel de Champlain கியூபெக்கின் சிறிய நகரான Taddoussacக்கு வந்ததுடன் பழங்குடி மக்களுடன் சுமுகமான உறவைப் பேணினார். மீண்டும் 1608ம் ஆண்டு வந்தபோது கியூபெக் நகரை “கண்டுபிடித்ததாக” குறிப்பிடப்படுகின்றது.

French explorer Jacques Cartier's arrival in the St … stock image | Look  and Learn

இவ்வாறு தம்மை வளர்த்துக் கொண்ட ஐரோப்பியர்கள் இப் பிரதேசங்களில் அகல கால் பதித்து தம்மை நிலைநாட்டும் முயற்சிகளில் ஈடுபட்டனர். அதில் ஒன்றுதான் ஆங்கில பணக்கார வியாபாரிகள் ஹட்சன் பே கம்பனியை Hudson’s Bay Company (HBC) நிறுவியமையாகும். இவர்களுக்குப் போட்டியாக கனடாவின் மேற்குப்பகுதியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பணக்கார வியாபாரிகள் வடமேற்கு கம்பனியை North West Company (NWC) உருவாக்கினார்கள். இறுதியாக இவர்கள் இணைந்து ஒரு பலமான வியாபார சக்தியாக உருவானார்கள். தொடர்ச்சியாக பொருளாதார அரசியல் ரீதியாக தம்மை உறுதியாக நிலைநாட்டிக் கொண்டனர்.

Hudson's Bay Company - Students | Britannica Kids | Homework Help

இவ்வாறு வியாபார செயற்பாடுகள் ஒரு புறம் நடைபெற மறுபுறம் இதனால் ஏற்பட்ட மனித உறவுகளால் பழங்குடி மக்களும் ஐரோப்பியர்களும் இணைந்த  Métis போன்ற புதிய இனங்கள், தேசங்கள் உருவாகின. இதேநேரம்  பழங்குடி மக்கள் குழுக்களுக்கிடையில் அதிகாரத்துவ வியாபாரப் போட்டிகளும் நடைபெற்றன எனக் கூறப்படுகின்றது. பழங்குடி மக்களைப் பல வகைகளில் பொருளாதார ரீதியாக பலவீனமாக்கியது. மேலும் ஒரு இடத்தில் வாழ வேண்டிய தேவைகளையும் உருவாக்கியதனால் பழங்குடி மக்களின் வாழ்வில் பண்பாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இவர்களும் கத்தி, பானை, கோடாலி, ஊசி, கேத்தில் போன்ற ஐரோப்பிய பொருட்களுடன் பரிச்சையமானார்கள். முதலில் மிருக தோல்மயிர் வியாபாரம் பழங்குடி மக்களுக்கு மிகவும் முக்கியமானது என உணரவைக்கப்பட்டது.இரண்டாவதாக இந்த வியாபாரத்தினுடாக ஐரோப்பிய பொருட்களில் தங்கியிருப்பதற்கு பழக்கப்படுத்தப்பட்டார்கள். மூன்றாவதாக இந்த வியாபாரத்தின் முழு கட்டுப்பாட்டையும் அதிகாரத்தையும் ஐரோப்பியர்கள் தம் வசப்படுத்தியபின் பழங்குடி மக்கள் எதிர்மறையான விளைவுகளை எதிர்கொள்ள ஆரம்பித்தார்கள்.மேலும் இந்த வியாபார உறவுகளினால் பெரியம்மை தொற்று பல்லாயிரக்கணக்கான பழங்குடி மக்களை அழித்தது. சுமார் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இறந்தார்கள்.

Fur traders - Fur trading in early North America

1492க்கு முன்பு  இருந்த பழங்குடி மக்களின் சனத் தொகை தொடர்பான பல்வேறுவிதமான விவாதங்கள் காணப்படுகின்றன. மத்திய அமெரிக்காவையும் மெக்ஸ்சிகோவையும் தவிர்த்து வட அமெரிக்காவில் 1.2 – 2.6மில்லின் மக்கள் வாழ்ந்ததாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைவிட அதிகமாக இருந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றன. இதைவிட வடமேற்கு கரையோரங்களில் 200,000 அதிகமான பல்வேறு தேசங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் வாழ்த்திருக்கலாம் என நம்பப்படுகின்றன. இன்றைய தெற்கு ஒன்டாரியோவான கிழக்கின் கிராமங்களில் விவசாயம் செய்து வாழ்ந்த வையன்டொட் அல்லது ஹிரோன் பழங்குடிகளே அன்று கனடாவின் அதிக சனத் தொகையினராக இருந்தனர். 20,000 இருந்து 33,000 வரையில் பல்வேறுபட்ட பழங்குடிகள் வாழ்ந்துள்ளனர். காலனித்துவத்தின் வருகையல் மேற்கில் சனத் தொகையில் பாரிய விழ்ச்சி காணப்பட்டது.

தொடரும்…
மீராபாரதி
இக் கட்டுரை கனேடியப் பழங்குடிகள் தொடர்பான கற்கைகளை  அல்பேட்டா பல்கலைக்கழகத்தில் இலவசமாக கற்பதனுடாக அதன் இரண்டாவது  பாடத்திட்டத்தை தழுவி மொழிபெயர்ப்பதனுடாக எழுதியதாகும்.

Donnacona - Wikipedia



உசாத்துணைகள்

Brown, Craig. 2012. Illustrated History of Canada. McGill-Queen’s Press.

Bumsted, J. M. 2008. Lord Selkirk: A Life. Winnipeg, MB: Univiersity of Manitoba Press.

Burnett, Kristin, and Geoff Read, eds. 2012. Aboriginal History: A Reader. 2nd ed. Don

Mills, ON: Oxford University Press.

Colpitts, George. 2014. Pemmican Empire: Food, Trade, and the Last Bison Hunts in

the North American Plains, 1780–1882. New York, NY: Cambridge University

Press.

Daschuk, James W. 2013. Clearing the Plains Disease, Politics of Starvation, and the

Loss of Aboriginal Life. Canadian Plains Studies, 65. Regina Sask: University of

Regina Press.

Devine, Heather. 2004. The People Who Own Themselves: Aboriginal Ethnogenesis in

a Canadian Family, 1660-1900. Calgary, AB: University of Calgary Press.

Dickason, Olive Patricia. 2009. Canada’s First Nations: A History of Founding Peoples

from Earliest Times. 4th ed. Don Mills: Oxford University Press.

Dickason, Olive Patricia, and William Newbigging. 2015. A Concise History of Canada’s

First Nations. 3rd ed. Don Mills, ON: Oxford University Press.

Dolin, Eric Jay. 2011. Fur, Fortune, and Empire: The Epic History of the Fur Trade in

America. New York, NY: W. W. Norton & Company.

Draper, David. 2012. ‘Mmm, Meat Cake’. Field & Stream 117 (7): 36.

Foster, John Elgin, R. C. Macleod, and Theodore Binnema. 2001. From Rupert’s Land

to Canada. Edmonton, AB: University of Alberta.

Frideres, James S. 2012. Aboriginal Peoples in Canada. 9th ed. Toronto: Pearson.

Gaudry, Adam. 2016. ‘Respecting Métis Nationhood and Self-Determination in Matters

of Métis Identity’. In Aboriginal History: A Reader, edited by Kristin Burnett and

Geoff Read, Second edition, 152–163. Oxford University Press.

Gelo, Daniel J. 2016. Indians of the Great Plains. New York, NY: Routledge.

Gordon, Irene Ternier. 2013. The Laird of Fort William: William McGillivray and the

North West Company. Victoria; Vancouver; Calgary: Heritage House Publishing

Ltd.

Harris, Cole, and Geoffrey J Matthews. 1987. Historical Atlas of Canada. Vol. 1.

Toronto: University of Toronto Press. http://site.ebrary.com/id/10291556.

Hogue, Michel. 2015. Metis and the Medicine Line: Creating a Border and Dividing a

People. First edition.. UPCC Book Collections on Project MUSE. Chapel Hill, NC:

The University of North Carolina Press.

Hughes, Michael. 2016. ‘Within the Grasp of Company Law: Land, Legitimacy, and the

Racialization of the Métis, 1815–1821’. Ethnohistory 63 (3): 519–540.

doi:10.1215/00141801-3496811.

Ingstad, Helge, and Anne Stine Ingstad. 2000. The Viking Discovery of America: The

Excavation of a Norse Settlement in L’Anse Aux Meadows, Newfoundland. St.

John’s, NF: Breakwater Books.

Innis, Harold Adams. 1999. The Fur Trade in Canada: An Introduction to Canadian

Economic History. Toronto: University of Toronto Press.

Kardulias, P. Nick. 1990. ‘Fur Production as a Specialized Activity in a World System:

Indians in the North American Fur Trade’. American Indian Culture and Research

Journal 14 (1): 25–60. doi:10.17953/aicr.14.1.38033m5812pv6853.

Kelly, Robert L. 2013. The Lifeways of Hunter-Gatherers: The Foraging Spectrum. New

York, NY: Cambridge University Press.

Macdougall, Brenda, and Nicole St-Onge. 2013. ‘Rooted in Mobility: Metis Buffalo[1]Hunting Brigades’. Manitoba History, no. 71 (Winter): 21–32.

Miller, J. R., ed. 1991. Sweet Promises: A Reader on Indian-White Relations in Canada.

Toronto: University of Toronto Press.

———. 2004. Lethal Legacy: Current Native Controversies in Canada. Toronto:

McClelland & Stewart.

Milloy, John S. 1990. The Plains Cree: Trade, Diplomacy and War, 1790 to 1870.

Winnipeg, MB: University of Manitoba Press.

O’Toole, Darren. 2013. ‘From Entity to Identity to Nation: The Ethnogenesis of the

Wiisakodewininiwag (Bois-Brûlé) Reconsidered’. In Metis in Canada: History,

Identity, Law and Politics, edited by Christopher Adams, Ian Peach, and Gregg

Dahl, 143–204. Edmonton, AB: University of Alberta.

Palmer, Jessica Dawn. 2011. The Dakota Peoples: A History of the Dakota, Lakota and

Nakota through 1863. Jefferson, NC: McFarland.

Payne, Michael. 2004. The Fur Trade in Canada. Toronto: J. Lorimer and Company.

Podruchny, Carolyn. 2006. Making the Voyageur World: Travelers and Traders in the

North American Fur Trade. Lincoln, NB: University of Nebraska Press.

Ray, Arthur J. 2015. Indians in the Fur Trade: Their Roles as Trappers, Hunters, and

Middlemen in the Lands Southwest of Hudson Bay, 1660-1870. Toronto:

University of Toronto Press.

———. 2016. An Illustrated History of Canada’s Native People: I Have Lived Here since

the World Began. 4th ed. McGill-Queen’s Press.

‘RCAP Report–Royal Commission on Aboriginal Peoples’. 1996. Federal Government

of Canada Vol. 1. Ottawa, ON: Indian and Northern Affairs (INAC).

http://www.collectionscanada.gc.ca/webarchives/20071115053257/http://www.ai

nc-inac.gc.ca/ch/rcap/sg/sgmm_e.html.

Smith, Dennis. 2008. ‘Convergence: Fort Peck Assiniboines and Sioux Arrive in the Fort

Peck Reigion, 1800–1871’. In The History of the Assiniboine and Sioux Tribes of

the Fort Peck Indian Reservation, Montana, 1800-2000, edited by David Reed

Miller, Joseph R. McGeshick, Dennis Smith, and James Shanley, 41–64. Fort

Peck, MA: Montana Historical Society.

Spraakman, Gary. 2015. Management Accounting at the Hudson’s Bay Company: From

Quill Pen to Digitization. Bingley, UK: Emerald Group Publishing.

St-Onge, Nicole, Carolyn Podruchny, Brenda Macdougall, and Maria Campbell, eds.

2012. Contours of a People: Metis Family, Mobility, and History. New Directions

in Native American Studies. Norman, OK: University of Oklahoma Press.

Thomas, David Hurst. 2013. Exploring Ancient Native America: An Archaeological

Guide. New York; London: Routledge.

Thorner, Thomas, and Thor Frohn-Nielsen, eds. 2009. A Few Acres of Snow:

Documents in Pre-Confederation Canadian History. Toronto, ON: University of

Toronto Press.

Tough, Frank. 1996. As Their Natural Resources Fail: Native Peoples and the

Economic History of Northern Manitoba, 1870-1930. Vancouver: UBC Press.

Trigger, Bruce. 1986. Natives and Newcomers: Canada’s ‘Heroic Age’ reconsidered.

Montreal: McGill-Queen’s Press.

Trigger, Bruce G. 1987. The Children of Aataentsic: A History of the Huron People to

1660. Kingston, ON: McGill-Queen’s Press.

Voyageur, Cora J., David Newhouse, and Dan Beavon, eds. 2011. Hidden in Plain

Sight: Contributions of Aboriginal Peoples to Canadian Identity and Culture.

Toronto: University of Toronto Press


Leave a comment

Categories