TNPSC Thervupettagam

நிலையான மேம்பாட்டிற்காக நிதியளித்தல் அறிக்கை 2024

April 17 , 2024 14 days 146 0
  • 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பினர் நாடுகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட 17 நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDGs) 2030 ஆம் ஆண்டிற்குள் அடைய வேண்டுமென்றால் டிரில்லியன் கணக்கான டாலர்கள் தேவைப் படும்.
  • மேம்பாட்டு நிதி இடைவெளியை நிகர் செய்வதற்கு 4.2 டிரில்லியன் டாலர் முதலீடுகள் தேவைப்படுகிறது.
  • கோவிட்-19 பெருந்தொற்று தொடங்குவதற்கு முன்னதாக இந்த மதிப்பு 2.5 டிரில்லியன்  டாலராக இருந்தது.
  • குறைவான வளர்ச்சியடைந்த நாடுகளில் (LDC) 2023 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வருடாந்திர வீதத்தில் 40 பில்லியன் டாலர் கடன் சேவை வழங்கப்படுகிறது.
  • இது 2022 ஆம் ஆண்டில் 26 பில்லியன் டாலராக இருந்த நிதி வழங்கீட்டினை விட 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும்.
  • 2021 ஆம் ஆண்டில் 185.9 பில்லியன் டாலர் ஆக இருந்த அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவி (ODA) ஆனது, 2022 ஆம் ஆண்டில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சுமார் 211 பில்லியன் டாலரை எட்டியது.
  • தற்போதையப் போக்குகள் தொடர்ந்தால், 2030 மற்றும் அதற்குப் பிறகும் சுமார் 600 மில்லியன் மக்கள் (அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள்) கடுமையான வறுமை நிலையில் வாழ்வார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிடுகிறது.
  • 1944 ஆம் ஆண்டு பிரெட்டன் வூட்ஸ் என்ற மாநாட்டில் அமைக்கப்பட்ட சர்வதேச நிதிய அமைப்பு இந்த நோக்கத்திற்கு ஏற்றதாக இல்லை.
  • இதனால் அமெரிக்காவில் நடைபெற்ற பிரெட்டன் வூட்ஸ் மாநாடு, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்களின் உருவாக்கத்திற்கு வழி வகுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்