36.6 C
Chennai
May 26, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முக்காணியில் வெள்ளம் – லாட்ஜில் சிக்கித் தவிக்கும் 200 பேரை மீட்க கோரிக்கை..!

தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் வெள்ளம் காரணமாக தனியார் லாட்ஜ் ஒன்றில் உணவின்றி சிக்கித் தவித்து வரும் 200-க்கும் மேற்பட்டோரை மீட்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முக்காணி கிராமம் மற்றும் அதன் அருகில் உள்ள ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடந்த 17-ம் தேதி முக்காணி ஜங்கஷனுக்கு வந்த சுமார் 200 நபர்கள், அங்குள்ள உமரி தங்கம் லாட்ஜ் மற்றும் சுற்றியுள்ள இடங்களிலும் சிக்கியுள்ளனர். 3 நாட்களாக அவர்கள் உணவு, தண்ணீர், அத்தியாவசியப் பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான குடிநீர் தாராளமாக இருக்கிறது..! – மத்திய அரசு விளக்கம்

எனவே அரசு நிர்வாகமோ, தன்னார்வ தொண்டு உதவி இயக்கங்களோ, உதவிக் கரம் நீட்டும் இயக்கங்களோ உடனடியாக உதவ அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள சூழ்நிலை குறித்து அறிய 9677062377, 8939192665, 04630-275477, 9344178023, 7550352800 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading