June 7, 2024
முக்கியச் செய்திகள் உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – கட்டட இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு..!

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானில் நேற்று 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்நாட்டின் இஷிகாவா மாகாணத்தில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. கடற்கரை பகுதியில் சுனாமி அலைகள் எழுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஹோன்ஷூ அருகே 13 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலோர பகுதிகளில் 5 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் எழுந்தன. பாதுகாப்பு கருதி 33,500 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டன. கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

இதையும் படியுங்கள் : இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – திருச்சியில் 3 அடுக்கு பாதுகாப்பு..!

இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததாகவும், அதில் இருந்த 6 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாகவும், அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக ஜப்பான் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading